Thursday, 12 January 2012

திருப்பூர் புத்தகக் கண்காட்சி, 2012

ஜனவரி 25-லிருந்து பிப்ரவரி 05-வரை,
KRC சிட்டி சென்டர், திருப்பூர்


திருப்பூர் இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் 80 சதவீதத்தை பெற்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அன்னிய செலவாணியாக பெற்றுத் தரும் நகரம்இந்த நகரத்தின் மக்கள் ஓய்வறிய உழைப்பாளிகள்வந்தாரை வாழ வைக்கும் குணம் படைத்தவர்கள்இவர்கள் அமைதியாக இளைப்பாறஓய்வெடுக்கபொழுதுபோக்கசந்தோஷமாக குடும்பத்தோடு மகிழ்ந்து பேசி சிரித்திட பூங்காவோவிளையாட்டு அரங்கமோகலையரங்கமோ இல்லை என்ற வருத்தில் வாழ்ந்துவரும் இயந்திரமயமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள்



நாட்டை காக்கும் இவர்களுக்கு வீட்டை காக்க நேரமில்லை,. எனவே தான் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகலாயம் இணைந்து கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகக் கண்காட்சியும்மாலை நேரத்தில் கலைநிகழ்ச்சிகள்கருத்தரங்கங்கள்பட்டிமன்றங்கள்கலைஇலக்கிய போட்டிகள் என ஆண்டுக்கு 10 நாட்கள் ஒரு திருவிழாவாக நடத்தி வருகிறது.

இந்த புத்தகக் கண்காட்சியை மேற்படி அமைப்பு மட்டுமல்லாது திருப்பூரின் தொழில் அதிபர்கள்கல்விநிறுவனங்கள்பல்வேறு அமைப்புகள் இணைந்தும் உதவி செய்து திருப்பூரின் திருவிழாவாக கொண்டாடி வருகிறது



வது திருப்பூர் புத்தகக் கண்காட்சி வரும் 2012 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை திருப்பூரில் நடைபெறுகிறதுஇதனை சிறப்பாக நடத்த வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதுவரவேற்புக்குழுவின் தலைவராக அரிமா ஜீவானந்தம்செயலாளராக செ.முத்துக்கண்ணன்பொருளாளராக .நிசார்அகமது உள்ளிட்டு நகரின் முக்கிய பிரமுகர்கள்ஆசிரியர்கள்கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள்வழக்கறிஞர்கள்தொழில் அதிபர்கள்அரசு துறை ஊழியர்கள்சமூக சேவகர்கள்சமூக ஆர்வலர்கள் கொண்டு 50க்கும் மேற்பட்ட துணை நிர்வாகிகள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மாணவமாணவிகளுக்கான இலக்கிய போட்டிகளும் நடைபெற உள்ளனதினந்தோறும் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு குலுக்கல் முறையில் புத்தகப் பரிசு ரூ500 மதிப்பில் வழங்கப்பட உள்ளது. 9 வது புத்தகத் திருவிழாவை நோக்கி மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
வாருங்கள் 

புத்தக ஆயுதத்தை கையில் ஏந்துவோம்.. மனிதத்தை காப்போம்.”

2 comments:

  1. புதிய வாசிப்பும், புதியன தேடலும் தேசத்தையும், மக்களையும் வளர்க்கவும், மேம்படுத்தவும் பயன்படும்.. ஆயுதங்களில் வேண்டாம் வல்லரசு கனவு.. நல்ல மனிதர்களை உருவாக்குவதில் வல்லரசு ஆக்கிடுவோம் இந்தியாவை,, மலர்ந்த நூற்றாண்டு நமக்கான நூற்றாண்டு.. சமதர்ம சமூகத்தை அமைத்திடும் நூற்றாண்டு என்ற கருத்தை நனவாக்க இந்த புத்தகக் கண்காட்சி பயன்படட்டும்,

    ReplyDelete
  2. இந்த புத்தகக்கண்காட்சியின் எனது Face book நண்பர் Tamil Ganesan அவர்களின் துணைவர் டாக்டர் குமார் கணேசன் அவர்களின் "ஓர் அமெரிக்கத் தமிழனின் தேடல் சுகமானது..
    எனும் கவிதை புத்தகம் அரங்கம் எண் 14 ஸ்ரீபுத்தக களஞ்சியம் மற்றும் அரங்கம் எண் 46 நியு செஞ்சுரி புக் ஹவுஸ் கிடைக்கபெறும்

    ReplyDelete

Video Bar

Loading...